அரசாங்க வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு சலுகையடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார்.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் மேற்படி நிகழ்வு நேற்றய தினம் இடம்பெற்றது.
இதில் வடமாகாணத்திலுள்ள வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மக்களுக்கான அவர்களது சேவைகளை இலகுபடுத்தும் பொருட்டு இம் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக ஒருதொகுதியினருக்கு ஜனாதிபதி அவர்கள் இம் மோட்டார் சைக்கிள்களை வழங்கி வைத்தார்.
வடமாகாணத்தைச் சேர்ந்த ஆண், பெண் வெளிக்கள உத்தியோகத்தர்கள் 4558 பேருக்கு நேற்றய தினம் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
இதனிடையே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக வடமாகாணத்திலுள்ள வடபிராந்திய இலங்கைப் போக்குவரத்துச் சபையின் யாழ்ப்பாணம், காரைநகர், பருத்தித்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய ஏழு சாலைகளுக்குமான புதிய பேருந்துகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது அமைச்சர்களான குமார வெல்கம, டக்ளஸ் தேவானந்தா, றிசாட் பதியூதீன் உள்ளிட்ட அமைச்சர்களுடன், பிரதியமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பல்துறைசார்ந்தோரும் கலந்து கொண்டனர்.