புதிதாக சமுர்த்தி பயனாளிகளை இணைத்துக்கொள்வதில் அரசியலுக்கு அப்பால் ஒழுங்குமுறையான வேலைத்திட்டம் ஒன்றை அறிமுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த புதிய நடைமுறையின் கீழ் பல்வேறு காரணங்களினால் பிரதேச செயலாளர் மட்டத்தில் வெளியேறும் சமுர்த்தி பயனாளிகளின் குடும்பங்களுக்காக தகுதிகளை கொண்ட புதிய குடும்ப பயனாளிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்..
இதற்கான சுற்றறிக்கை ஒன்று கடந்த 11 ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதற்கமைவாக விரைவாக புதிய சமுர்த்தி பயனாளிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
அத்தோடு மார்ச் முதலாம் திகதி தொடக்கம் இவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் பணி ஆரம்பிக்கப்படும்.