சட்டவிரோதமாக மரங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க படையினரும் பொலிஸாரும் முன்வரவேண்டும் என்று யாழ்.மாவட்ட வன அதிகாரி கே.யோகரட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வன்னிப்பகுதியில் இருந்து யாழ்.மாவட்டத்திற்கு சட்டவிரோதமாக மரங்கள் தறிக்கப்பட்டு கொண்டு வரப்படுகின்றன.
யாழ்.மாவட்டத்தில் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு எமக்கு ஆளானிப் பற்றாக்குறையுள்ளதால் இதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.
10 அதிகாரிகள் தேவையான இடத்தில் இங்கு 2 பேர் மட்டுமே கடமையாற்றி வருகின்றோம். இதனால் இந்த நடவடிக்கையைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக் காணப்படுகின்றது.
வன்னியில் இருந்து யாழிற்கு வருவதற்குள் இரண்டு இடங்களில் சோதனைச் சாவடிகள் உள்ளன. இவற்றை எல்லாம் தாண்டி மரங்கள் யாழிற்கு வருவது எப்படி? என கேள்வி கேட்க விரும்புகிறேன்.
எனவே இந்த சட்டவிரோத மரக்கடத்தல் நடவடிக்கையைக் கட்டுப்படுத்த இராணுவத்தினரும் பொலிஸாரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மர ஆலைகளை பதிவு செய்யுமாறு வனவள திணைக்களம் வேண்டுகோள்
யாழ். மாவட்டத்தில் இதுவரையில்; 325 மர ஆகாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பதிவு செய்யாத ஏனைய மர ஆலைகளை எதிர்வரும் யூலை மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் வனவள திணைக்களத்தில் பதிவு செய்யுமாறும் பதிவு செய்யாத மர ஆலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் வனவளதிணைக்கள அதிகாரி மேலும் கூறினார்.