சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிக்க முயன்ற இருவர் கைது

arrest_1வீதியால் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிக்க முயன்ற இரு இளைஞர்கள் தெல்லிப்பழை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை 2.30 மணியளவில் அளவெட்டிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தெல்லிப்பழை அளவெட்டி வீதியில் தனிமையில் வந்துகொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை உந்துருளியில் வந்து அறுத்துக்கொண்டு தப்பிக்கமுற்றபட்டபோது குறித்த இருவரும் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் உடுவில் மற்றும் அளவெட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கைது செய்யப்பட்ட இருவரிடம் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts