யாழ். கோப்பாய் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவமொன்றில் இருவர் காயமடைந்துள்ளனர். மானிப்பாய் வீதியில் இருந்து வருகை தந்த பவுசர் ஒன்றும் யாழ்ப்பாணத்தில் இருந்த வருகை தந்த மோட்டார் சைக்கிளும் கோப்பாய் சந்தியை கடக்க முற்பட்டபோது விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் மோட்டர் சைக்கிலில் பயணம் செய்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் கோப்பாய் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த கோப்பாய் பொலிஸார் இந்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர்.
காயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதானா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.