கோட்டை பகுதியிலிருந்து கைக்குண்டு மீட்பு

Hand-bombயாழ்ப்பாணத்திலுள்ள ஒல்லாந்தர் கோட்டைக்கு பின்புறத்தில் இருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாக யாழ். பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் எம்சி.எம்.ஜெவ்ரி தெரிவித்தார்.

யாழ். பொலிஸாருக்கு நேற்று மதியம் 3.30 மணிக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் விசேட அதிரடிப்படை பொலிஸார், மேற்படி கைக்குண்டினை மீட்டு அதே இடத்தில் வைத்து செயலிழக்கச் செய்ததாக அவர் மேலும் கூறினார்.

Related Posts