கொழும்பு ஆனந்தாக்கல்லூரியை 8 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டது யாழ் இந்துக் கல்லூரி

யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் யாழ் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கும் இடையிலான வி.ரீ.எஸ்.சிவகுருநாதன் வெற்றிக்கிண்ணத்துக்கான இரண்டாவது வருடாந்த நட்புறவு கிரிக்கெட் சுற்றுப் போட்டி இன்றுடன் நிறைவு பெற்றது. இதனடிப்படையில் யாழ் இந்துக் கல்லூரி 8 விக்கெட்டுக்களால் ஆனந்தா கல்லூரியை வீழ்த்தி இப் போட்டியில் வெற்றி கொண்டது.

இப் போட்டி பற்றிய முழு விபரம் :

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் இந்து அணித்தலைவர் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தார்.
இதனடிப்படையில் முதல் இனிங்ஸல் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஆனந்தா கல்லூரி 50.2 ஓவர்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 208 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆனந்தா கல்லூரி அணி சார்பில் துடுப்பெடுத்தாடிய

Lakkana Jeyasekar – 64 (9 fours)
Danuka Madushan- 49 (7 fours)
Sammu Ashan – 26 (2 fours, 2 sixes)  ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி சார்பில்

Vamanan – 3 Wickets
Mathusan – 3 Wickets
Sharangan – 2 Wickets

இதன் பின் முதல் இனிங்ஸில் 209 ஓட்டங்களை பெற வேண்டும் என்ற நிலையில் துடுப்பெடுத்தாடி வரும் யாழ் இந்து அணி முதலாம் நாள் நிறைவில் 6 இலக்குகளை இழந்து 121 ஓட்டங்களை பெற்ற நிலையில் முதல் நாள் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டனர்.

இதன் பின் இன்றைய தினம் தனது துடுப்பாட்டத்தை  தொடர்ந்த யாழ் இந்துக் கல்லூரி 50.2 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 206 ஓட்டங்களை பெற்றனர்.

துடுப்பாட்டத்தில் யாழ் இந்து சார்பில் :

Sajeekan – 68 (11 fours)
Vamanan – 44 (36 balls) (5 sixes, 1 four)
Jasminan – 27 (4 fours, 1 six) ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் ஆனந்தா கல்லூரி சார்பில்

Tharana Ravinthu – 3 Wickets
Dileepa Jeyalath – 2 Wickets
Isuru Kunasekara – 2 Wickets
Dushmantha Dissanayakke – 2 Wickets

இதன் பின் தனது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த ஆனந்தா கல்லூரி 31.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 100 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

ஆனந்தா கல்லூரி அணி சார்பில் துடுப்பெடுத்தாடிய

Lakkana Jeyasekar – 30 (3 fours, 2 sixes)
Thamalakka Athulathmuthali – 21 (2 fours, 1 sis)
Dileepa Jeyasekara – 11* ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி சார்பில்

Vamanan – 6 Wickets
Mathusan – 3 Wickets
Jasminan – 1 Wickets

பின்னர் 103 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் தனது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த யாழ் இந்துக் கல்லூரி 34.5 ஓவர்களில் 2 விக்கெட்டை மாத்திரம் இழந்து 105 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்து இப் போட்டியை வெற்றி கொண்டது.

துடுப்பாட்டத்தில் யாழ் இந்து சார்பில் :

Kalkohan – 58*(7 fours, 1 six)
Sajeekan – 19* (1 four)
Mathusan – 17 (3 fours) ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் ஆனந்தா கல்லூரி சார்பில்

Dileepa Jeyalath – 1 Wickets

இப் போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரர் விருது சஜீகனுக்கும் (J.H.C), சிறந்த பந்துவீச்சாளர் விருது வாமணனுக்கும் (J.H.C), சிறந்த களத்தடுப்பாளர் விருது தரண ரவீந்துவிற்கும் (C.A.C), இப் போட்டியின் ஆட்ட நாயகன் விருது வாமணனுக்கும் (J.H.C) வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிழற்படங்கள்

Related Posts