கைதியை தப்பவிட்ட நான்கு பொலிஸாருக்கு தற்காலிக பணிநீக்கம்

Sl_police_flagகோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்சீவ ஜெயக்கொடி புதன்கிழமை (05) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

‘திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய கைதியொருவரை கடந்த திங்கட்கிழமை (03) யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காகக் கொண்டு சென்றபோது, அக்கைதி தப்பியோடியிருந்தார்.

குறித்த கைதியினை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காக கொண்டு சென்ற நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும், தமது கடமையினைச் சீராக மேற்கொள்ளாத காரணத்தினால் அவர்களைத் தற்காலிகமாக பதவியிலிருந்து நீக்குமாறு வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொகான் டயஸ் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதற்கமைய குறித்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் தற்போது பணியிலிருந்து நீக்குவதாகவும், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளளப்படுவார்கள்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts