கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

இந்தியா கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் யாழ் பேருந்து நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமான இவ் போராட்டம் இந்தியா கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலையினால் இலங்கைக்கும் பாதிப்புக்கள் ஏற்ப்படும் இதனால் இந்திய அரசே உடனடியாக அணு உலை நிர்மாணப் பணிகளை நிறுத்த வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றியவர்கள் யாருக்காக மின்சாரம், யாருக்காக அணு உலை, புதுடில்லிக்கு அபிவிருத்தி தமிழ் நாடு மற்றும் இலங்கைக்கு சுடுகாடு,ஐரோப்பிய நாடுகளில் அணு உலை மூடப்படுகின்றன இந்தியா அவற்றை வாங்கி கொலைக் களங்களை கட்டுகிறது.

கொல்லாதே கொல்லாதே சூரியக்கதிரால் கொல்லாதே இந்தியா அரசே அணு உலையை உடனே நிறுத்து போன்ற கோசங்கள் பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ் கவனயீர்ப்பு போராட்டத்தினை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts