குருக்களை கட்டி வைத்து கொள்ளை

யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவான் வடக்கு பகுதியிலுள்ள குருக்கள் ஒருவருடைய வீட்டிற்குள் வியாழக்கிழமை (16) இரவு நுழைந்த கொள்ளையர்கள், வீட்டிலிருந்த கணவன் மனைவியை கட்டிவைத்துவிட்டு 5 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடித்து சென்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர்.

இந்த கொள்ளை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குருக்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 25 பவுண் நகை மற்றும் 1 இலட்சம் ரூபாய் பணம் ஆகியனவே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts