குடாநாட்டில் டெங்கின் தாக்கம், இதுவரையில் 319 பேர் சிகிச்சை

maleriya-mosquto-denkuகுடாநாட்டில் இந்த வருடத்தில் நேற்றுவரை டெங்கு நோய்த் தாக்கத்திற்கு இலக்காகிய 319 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக அவ்வைத்திய சாலையின் புள்ளிவிபரமொன்று தெரிவித்துள்ளது.

இந்த மாதம் மட்டும் நேற்று வரை 18 பேர் இவ்வாறு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட தாகவும், அந்த புள்ளி விபரங்கள் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை தற்சமயம் டெங்கு நோயின் தாக்கம் சற்றுக்குறைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளன. யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள், கடந்த மாதத்தை விட இந்த மாதத்தில் டெங்கு நோய்க்கு சிகிச்சை பெற்றவர்கள் குறைவு எனவும் தெரிவித்துள்ளன.

Related Posts