கிளிநொச்சி விபத்தில் குழந்தை மரணம்

கிளிநொச்சி-கல்மடு வீதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வடக்கச்சி, மாதா தேவி வீதி மாயனூரைச்சேர்ந்த இரண்டரை வயது குழந்தையான ஜீவானந்தன் கம்சன் மரணமடைந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது மகனான இரண்டரை வயது குழந்தையை அவரது தந்தை, மோட்டார் சைக்கிளின் முன்னால் வைத்துகொண்டு பயணித்தபோதே அந்த மோட்டார் சைக்கிள், வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று மாலை 3.15க்கு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலே குழந்தை மரணமடைந்துள்ளது.

Related Posts