கிளிநொச்சி – கொழும்புக்கான ரயில் போக்குவரத்துக்கான ஆசனப்பதிவுகளை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்வதற்கானஒழுங்குகளை ரயில்வே திணைக்களம் மேற்கொண்டுள்ளது என்று திணைக்களத்தின் பிரதான அதிகாரி த.செந்தில்நாதன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
யாழ்ப்பாணத்திலிருந்து ரயில் பயணத்தை மேற்கொள்ளவுள்ள பயணிகள் கிளிநொச்சி சென்று அவசரமாக பயணச் சிட்டைகளைப் பெற முண்டியடிக்கின்றனர்.
இந்தச் சிரமத்தைத் தவிர்ப்பதற்காக 14 நாள்களுக்கு முன்னதாகவே ஆசனப் பதிவுகளை யாழ்.நகரில் மேற்கொள்ளமுடியும்.
யாழ். கே.கே.எஸ் வீதியில் பிரதம தபாலகத்துக்கு அருகில் உள்ள “மொபிற்றல்’ கிளை அலுவலகத்தில் இதற்காக ரயில் நிலைய உத்தியோகத்தர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாள்களில் காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை பயணிகள் ஆசனப் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
யாழ். குடாநாட்டை சேர்ந்தவர்கள் இங்குள்ள கருமபீடத்தில் பதிவுகளை செய்து பயணத்தை இலகுபடுத்திக் கொள்ள வசதியாகவே ரயில்வே திணைக்களம் இந்த ஏற்பாட்டைச் செய் துள்ளது என்றார் அவர்.