கிளிநொச்சியின் பாதுகாப்பிற்கு படையினரின் காவல் நாய்கள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர், பாதுகாப்பு பணிகளுக்கு நூற்றுக்கணக்கான நாய்களைப் பயிற்றுவித்துள்ளனர்.

dog-4

கிளிநொச்சிப் படைத்தலைமையகத்தின் கீழ் உள்ள  57, 65, 66வது பிரிவுகளைச் சேர்ந்த படையினரால், பாதுகாப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும், 353 நாய்களுக்கு 66-1வது பிரிகேட்டினால் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

dog-1

இதில் இந்த நாய்களை பராமரிக்கும் படையினரும் பங்கேற்றுள்ளனர்.

இது கிளிநொச்சிப் படைத் தலைமையகத்தினால் காவல்நாய்களுக்காக வழங்கப்படும் இரண்டாவது கட்ட பயிற்சியாகும்.

dog-2

காவல்நாய்களுக்கான இந்தப் பயிற்சி நிறைவும், நாய்களின் சாகச நிகழ்வும் கடந்த 6ம் நாள் கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.

இதில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட 180 நாய்களும் அவற்றின் பராமரிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

dog-3

இந்த நிகழ்வில் சிறிலங்கா இராணுவத்தின் கிளிநொச்சிப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க மற்றும் டிவிசன், பிரிகேட் கட்டளை அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில், சிறிலங்காப் படையினர் பெரும் எண்ணிக்கையான நாய்களை பாதுகாப்பில் ஈடுபடுத்தி வருவது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

Related Posts