கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். செம்மணி வீதி, கல்வியங்காடு பகுதியில் நேற்று மதியம் 3.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் புவனேந்திரன் சம்சன் என்ற சிறுவனே உயிரிழந்தவனாவான். சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.