காலையிலேயே சென்று தவறாது வாக்களியுங்கள்; இந்துமா மன்றம் வேண்டுகோள்

vote-box1[1] (1)நாளை நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் அனைவரும் காலையிலேயே சென்று தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று அகில இலங்கை இந்து மா மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்து மா மன்றம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வட மாகாணம், மத்திய மாகாணம், வடமேல் மாகாணம் ஆகிய மூன்று மாகாணங்களுக்குமான மாகாண சபைகளுக்கு தேர்தல்கள் நடைபெறுகின்றன. இத்தேர்தல்களில் வாக்களிக்க பல்லாயிரக்கணக்கான இந்து மக்களுக்கு வாக்குரிமை இருக்கின்றது.

காலையிலேயே ஜனநாயக அடிப்படையில் எம் உரிமைகளை பேண வாக்கு ஓர் ஆயுதம். அதனைப் பாவிக்காது விடுவது கடமையில் தவறுவதாகும்.

எனவே சனிக்கிழமை காலையில் வாக்குரிமை இருக்கும் எமது மக்கள் ஒவ்வொரு வரும் முதற் கடமையாக வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்க வேண்டும். மேலும் உங்கள் வாக்கை வேறு யாரும் துஷ்பிரயோகிக்காத விதத்தில் சனிக்கிழமை காலையில் வாக்களிப்பது வரவேற்கத்தக்கது.

சோதனைகளையும் வேதனைகளையும் தொடர்ந்து எதிர்நோக்கும் நிலையில் எமது மக்கள் இன்னும் இருப்பது கவலைக்குரிய விடயம். இத்தேர்தல் மூலம் எங்களின் பிரச்சினைகள் யாவும் தீர்ந்துவிடப்போவதில்லை என வாக்களிப்பில் கலந்து கொள்ளாதுவிடுவது புத்திசாலித்தனமான செயலல்ல.

உங்களின் வாக்குகளின் மூலம் மாகாண சபைகளை ஆட்சி செய்வதற்குப் பொருத்தமானவர்களை தெரிவு செய்கின்ற உரிமையை விட்டுக்கொடுக்கக் கூடாது.

மேலும் அது ஒரு கடமையும் கூட. எனவே அக்கடமை யிலிருந்தும் தவறக்கூடாது.
உங்கள் அபிலாசைகளைத் தீர்க்கவல்லவர்களை சனிக்கிழமை காலையில் உங்கள் வாக்குரிமை மூலம் தெரிவுசெய்யுங்கள் – என்று அவ் அறிக்கையில் உள்ளது.

Related Posts