காலாவதியான பொருட்களின் விற்பனை நாளாந்தம் அதிகரிப்பு

judgement_court_pinaiயாழில் காலாவதியான பொருட்கள் விற்பனை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது என யாழ். மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி என். சிவசீலன் இன்று தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தின் உள்ள ஐந்து நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, 56 வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது, யாழ்ப்பாணத்தில் 10 வர்த்தக நிலையங்களும், ஊர்காவற்துறை 8 வர்த்தகர்களும், மல்லாகம் 18 வர்த்தக நிலையங்களும், சாவகச்சேரி 10 வர்த்தக நிலையங்களுக்கும் எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக எதிர்வரும் வாரங்களில் அந்தந்த பிரதேச நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் கூறினார்.

அத்தடன், வர்த்தக நிலையங்களில் பொருட்களை நுகர்வோர் காலாவதி திகதி, கொள்வனவு திகதி என்பவற்றினை பரிசீலனை செய்து பெற்றுக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts