காரைநகரில் காவடி எடுத்துச் சென்றவர் இடைநடுவில் மயங்கி மரணம்

காரைநகர் ஈழத்துச் சிதம்பர தீர்த்த உற்சவத்தின் போது நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக பால்காவடி எடுத்த ஒருவர் இடைவழியில் மயங்கி வீழ்ந்து மரணமாகியுள்ளார்.இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் கோவிலிலிருந்து ஈழத்துச் சிதம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே இவர் மயக்கமடைந்தள்ளார்.

குறித்த நபரை உடனடியாக காரைநகர் வைத்தியசாலைக்கு இவர் கொண்டு சென்றபோதும் சிகிச்சை பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதில் வர்த்தகரும் முன்னாள் ஆசிரியருமான எஸ்.சபாநடேசன் (வயது 55) என்றவரே உயிரிழந்தவராவார்.

Related Posts