தாவளை இயற்றாலைப் பகுதியில் பற்றைக் காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு சாவகச்சேரி நீதிமன்ற உத்தரவின் பேரில் கொடிகாமம் பொலிஸாரால் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
எலும்புக் கூட்டுடன் காணப்பட்ட உடுப்புகள் மற்றும் செருப்பு ஆகியவற்றைக்கொண்டு அது இராசன் சந்திரமோகன் (வயது 13) என்னும் மாணவனுடையது என அவரது பெற்றோர் அடையாளம் காட்டினர். இறுதிக்கிரியைகள் செய்வதற்கு அதனை வழங்குமாறு அவர்கள் கோரியதையடுத்து எலும்புக்கூட்டை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து கொடிகாமம் பொலிஸார் நேற்றுமுன்தினம் எலும்புக்கூட்டைப் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதே பகுதியைச் சேர்ந்த சந்திரமோகன் காணாமல் போனது தொடர்பாக பெற்றோரால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
- Wednesday
- January 15th, 2025