காணாமல் போனவர்களின் உறவுகள் தமது நிலமை தொடர்பாக கரிசனை காட்டுமாறு பாப்பரசருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர் என்று வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு முக்கியஸ்தர் ஒருவர் தெரிவிக்கையில்,
வவுனியா, மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் காணாமல் போனோரின் உறவுகளுடனான சந்திப்பு ஒன்று கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. இச் சந்திப்பின் போது காணாமல் போனவர்களின் உறவுகள் 60 பேரின் கையொப்பம் அடங்கிய கடிதம் ஒன்று பாப்பரசருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அதில், இலங்கை வருகை தரும் பாப்பரசர் காணாமல் போனவர்களின் உறவுகளை சந்திக்க வேண்டும் எனவும் யுத்தத்தினால் பாதிப்படைந்துள்ள பிரதேசங்களையும் மக்களையும் பார்வையிட்டு தீர்வுக்கு உதவ வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.