களுத்துறையிலிருந்து வருகை தந்த இளைஞர், யுவதிகளுக்கு பிரியாவிடை

Dnace-kaluththuraiதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உள்நாட்டு இளைஞர்கள் பரிமாற்று வேலைத்திட்டத்தின் கீழ், களுத்துறை மாவட்டத்திலிருந்து அழைத்துவரப்பட்ட 50 இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு சனிக்கிழமை பிரியாவிடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த இளைஞர், யுவதிகள் சுன்னாகம் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் கடந்த ஒரு வாரகாலமாக தங்கியிருந்து இங்குள்ள உணவு முறைகள் உள்ளிட்ட கலாசார விழுமியங்களை அறிந்துகொண்டனர்.

இவர்களுடன் களுத்துறை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் மகேந்திர சந்திரசேனா, மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் ஆர்.பிறேமரத்தினா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சுன்னாகம் இலங்கை கிறிஸ்தவ இறையியல் கல்லூரி மண்டபத்தில் யாழ். மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவி இயக்குநர் த.ஈஸ்வரராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

Related Posts