கல்வியங்காடு இலங்கைநாயகி அம்மன் கோயிலுக்கு முன்பாக உள்ள சனசமூக நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பகுதியில் இருந்து இரண்டு கிரனேட்டுகள் இன்று காலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டன.
சன சமூக நிலையத்திற்கு பின்புறமாக உள்ள ஒதுக்குப்புறப் பகுதியை துப்புரவு செய்தவேளை பை ஒன்றில் கிரனேட்டுகள் இருப்பதைத் துப்புரவு பணியில் ஈடுபட்டவர்கள் அவதானித்தனர்.
இது தொடர்பாகக் கோப்பாய் பொலிஸாருக்கு நேற்று தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து அங்குவந்த பொலிஸாரும் இராணுவத்தினரும் கிரனேட் இருக்கும் இடத்தை அடையாளப்படுத்தி பாதுகாத்தனர்.
இந்த நிலையில் இன்று காலை குண்டு செயலிழக்கும் பிரிவினரின் உதவியுடன் கிரனேட்டுகள் மீட்கப்பட்டன.