கரையொதுங்கிய இந்திய ரோலர் படகு, மீனவர்கள் திருப்பி அனுப்பல்

இயந்திர கோளாறு காரணமாக யாழ். மாதகல் கடற் பரப்பில் கரையொதுங்கிய இந்திய ரோலர் படகு மற்றும் 7 மீனவர்களும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அ.எமிலியாம்பிள்ளை இன்று தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை காலை மாதகல் பகுதியில் 7 மீனவர்களுடன் கரையொதுங்கிய ரோலர் படகினை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தாவின் பணிப்புரைக்கு அமைய கடற்படை தளபதி ஜெயசிங்க ஆகியோரின் உதவியுடன் அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் இருந்து 7 பேர் கொண்ட இரு ரோலர் படகினை வரவழைத்து நேற்று காலை 10.00 மணிக்கு யாழ். மாதகல் கடற்பரப்பில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பி வைத்ததாகவும், படகில் கரையொதுங்கிய மீனவர்கள் எவரையும் கடற் படையினர் கைதுசெய்யவில்லை என்றும், கரையொதுங்கிய படகு மற்றும் இந்தியாவில் இருந்து வருகை தந்த மீனவர்கள் 14 பேரும் இந்தியாவிற்கு சென்றுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Related Posts