கரைகடந்தது ‘ஹூட்ஹூட்’

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த அதி பயங்கர ஹூட்ஹூட் புயல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணத்தை இன்று கரைகடந்தது.

புயல் தாக்கியபோது விசாகப்பட்டினத்தில் மணிக்கு 180 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியதுடன் கடும் மழையும் பெய்தது.

மழை தற்போது நின்றுள்ள போதிலும் மீண்டும் கடும் மழை பெய்யும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

ஹூட்ஹூட் புயல் தாக்கியதால் இதுவரை ஆந்திராவில் 2 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவின் கடற்கரையோர பகுதிகளில் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. இதனால் விசாகப்பட்டினம், விழியநகரம் மற்றும் ஸ்ரீகாகுளம் மாவட்டங்களில் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது.

ஆந்திரா மற்றும் ஒடிஸாவில் 4 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Related Posts