வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரனை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அங்கத்துவத்தில் இருந்து நீக்கியமை தொடர்பாக கந்தசாமி கமலேந்திரனுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பொன்னுத்துரை குகநாதன் இன்று வெள்ளிக்கிழமை (14) தெரிவித்தார்.
இந்தக் கடிதமானது, தேர்தல் திணைக்களத்தினால் கந்தசாமி கமலேந்திரனின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் செயலாளரிடமிருந்து வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவரின் பதவி நிலைமை தொடர்பான பதில்கள் கிடைத்த பின்னர் உள்ளுராட்சிச் சட்டதிட்டங்களுக்கு அமைவாக மேலதிக நடவடிக்கைகளை தேர்தல் திணைக்களம் மேற்கொள்ளுமென யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் மேலும் கூறினாக்ர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து கமலேந்திரன் நீக்கப்பட்டமை தொடர்பில், கட்சியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவினால் தேர்தல் ஆணையாளர் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு ஏற்கனவே கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி