பதிவு செய்யப்பட்ட 618 முச்சக்கரவண்டிகளிற்கும் மீற்றர் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் 2013 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக முச்சக்கரவண்டி சங்க தலைவர் எட்வேட் போல் தெரிவித்தார்.யாழ். மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் ஞாயிறு காலை 11.00 மணிக்கு யாழ். தம்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின் போது, யாழ். மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தினை அறவிடுவதற்காக முச்சக்கரவண்டிகளில் மீற்றர் பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், முச்சக்கரவண்டி சாரதிகள் சீருடைகள் அணிவது குறித்தும் ஜனவரி மாதம் நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.
இக்கலந்துரையாடலில், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கமல் (கமலேந்திரன்) மற்றும் யாழ். மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்க தலைவர் எட்வேட் போல் உட்பட உரிமையாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.