கட்சி அலுவலகங்களும் முற்றுகை

kajenயாழ்.மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் அலுவலகம் மற்றும் 3 ஆம் குறுக்குத் தெருவுக்கு அண்மையில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் என்பன இராணுவத்தினரினால்இன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை முதல் முற்றுகையிடப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு அலுவலகத்திற்குள்ளும் எவரும் உள்ளே செல்லமுடியாதவாறு இரும்பிலான தடுப்புக் வேலிகள் போடப்பட்டுள்ளன. அத்துடன், இன்று (18) காலை தனது அலுவலகத்திற்குச் சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளே செல்லவிடாது இராணுவத்தினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதேவேளை கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் அலுவலகமும் இராணுவம் மற்றும் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீதி ரோந்துகளில் ஈடுபடும் இராணுவத்தினர் சனசமூக நிலையம், ஆலயங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் அதிகமாக அவதானத்தினைச் செலுத்தியும் வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts