கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் யாழ்.விஜயத்தை அரசாங்கம் தடுத்து நிறுத்தியது?

rajitha-senaratne13வது திருத்தச் சட்ட விவகாரத்தில் அரசாங்கத்திற்கு எதிராக கருத்து கூறிவரும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, யாழ்ப்பாணத்திற்கு நேற்று மேற்கொள்ளவிருந்த விஜயம் திட்டமிட்ட வகையில் அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் பாஷையூரில் அமைக்கப்பட்ட இறங்கு துறையை அமைச்சர் திறந்து வைப்பதாக இருந்தது.

ஆனால் இறுதி நேரத்தில் அமைச்சரின் வருகை திட்டமிடப்பட்ட வகையில் தடுத்து நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்தோடு அமைச்சரின் வருகை தடுக்கப்பட்டதால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோ, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரச அதிகாரிகள் எவரும் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

குறிப்பாக அரச அதிகாரிகளுக்கு நிகழ்விற்கு போக வேண்டாம் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

Related Posts