யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரகாலத்தில் 10 கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இக்கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் பொலிஸார் விசாரஇணையை மேற்கொண்டுவருவதாகவும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணம், கொடிகாமம், நெல்லியடி, ஊர்காவற்றுறை, தெல்லிப்பழை, மானிப்பாய் ஆகிய பகுதிகளிலேயே இக்கொள்கைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.