கஜேந்திரனின் வீடு முற்றுகை

kajenthiranதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரனின் திருநெல்வெலியில் அமைந்துள்ள வீட்டிக்கு அருகில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.

அவரது வீட்டிற்கு அருகாமையிலுள்ள சனசமூக நிலையத்தின் திறப்பினை சனசமூக நிலையத் தலைவரிடமிருந்து வாங்கிய இராணுவத்தினர் அங்கு தாங்கள் 2 நாட்களுக்குத் தங்கப் போவதாகவும் கூறியுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் அதனை தடுக்கும் வகையில் இந்த ஏற்பாடுகள் நேற்று சனிக்கிழமை முதல் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

யாழ்.பல்கலை, நல்லூர் ஆலய சூழலில் இராணுவம் குவிப்பு

Related Posts