மின்சார நிலைய வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் திருட்டு

robberyயாழ். நகர பகுதியில் உள்ள மின்சார நிலைய வீதியிலுள்ள மூன்று வர்த்தக நிலையங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திருட்டு முயற்சி இடம்பெற்றுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

திருட்டு சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர்கள் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். இந்த முறைப்பாட்டின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் தடயவியல் நிபுணர்கள் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின் போது, தொலைபேசி விற்பனை நிலையம், தையல் கடை மற்றும், ஆடையகம் ஆகிய வர்த்தக நிலையங்களுமே உடைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு கடையில் மாத்திரம் 7,000 ரூபா பணம் திருடப்பட்டுள்ளது. ஏனைய இரு கடைகளையும் உடைத்த திருடர்கள் பூட்டுக்கள் உடைபடாத சந்தர்ப்பத்தில் கைவிட்டு சென்றுள்ளதாகவும் யாழ். பொலிஸார் கூறினர்.

ஒரே நேரத்தில் உடைக்கப்பட்ட 3 வர்த்தக நிலையங்களும் முஸ்லிம்களின் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts