‘ஒப்பம்’ தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் கமல்?

கடந்த வெள்ளியன்று ஓணம் பண்டிகை ரிலீஸாக மலையாளத்தில் வெளியான படங்களில் மோகன்லால்-பிரியதர்ஷன் கூட்டணியில் உருவாக்கி இருக்கும் ‘ஒப்பம்’ படம் முதலிடத்தை பிடித்திருப்பதாக தெரிகிறது. இந்தப்படத்தில் கண்பார்வையற்றவராக மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் மோகன்லால். அதனால் தானோ என்னவோ இந்தப்படம் ரிலீஸாவதற்கு முன்பே சூப்பர்ஸ்டார் ரஜினியும் ரிலீஸான மறுநாளே அஜித்தும் இந்தப்படத்தின் சிறப்புக்காட்சியை விரும்பி பார்த்துள்ளனர்.

oppam-kamal-mohan-lal

இப்போது மூன்றாவதாக உலக நாயகன் கமலும் இந்தப்படத்தை பார்த்துவிட்டார்.. உடனே பிரியதர்ஷனை அழைத்து பாராட்டியும் தள்ளிவிட்டார்.. குறிப்பாக பார்வையற்றவராக நடித்துள்ள மோகன்லாலின் அற்புதமான நடிப்பு கமலை அசத்திவிட்டது.. இத்தனைக்கும் ராஜபார்வை படத்தில் பார்வையற்றவராக நடித்தவர்தான் கமல். இப்போது இந்தப்படத்தை பார்த்ததும் இதன் தமிழில் ரீமேக்கில் தானே நடிக்க விரும்புவதாக பிரியதர்ஷனிடம் சொன்னார் என்றும் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே மோகன்லாலின் ‘த்ரிஷ்யம்’ பட ரீமேக்கில் நடித்து வெற்றி கண்ட கமல், இந்தப்படத்தில் நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.. காரணம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என மற்ற நான்கு மொழிகளிலும் ரீமேக் செய்யக்கூடிய அருமையான சைக்கோ த்ரில்லர்தான் இந்த ‘ஒப்பம்’.

Related Posts