ஐ.நா.பொதுச்சபைக்கு மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இலங்கை விடயம்!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கு சமர்ப்பித்துள்ள தனது அறிக்கையொன்றில் ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் சயிட் அல்ஹுசைன் இலங்கை குறித்தும் குறிப்பிட்டுள்ளார் தன்னுடைய அலுவலகம் முன்னைய ஆணையாளரின் கீழ் கடந்த ஒரு வருட காலப் பகுதியில் மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்து சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

al-husain

குறிப்பிட்ட காலப் பகுதியில் ஆணைக்குழு மூன்று நாடுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. சிரியா, மத்திய ஆபிரிக்க குடியரசு, இலங்கை ஆகியனவே இந்த நாடுகள். இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகள் தொடர்பில் மூன்று விசேட குழுக்கள் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் பலஸ்தீனம், எரித்திரியா மற்றும் ஈராக் குறித்தும் விசாரணைகள் இடம்பெறலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் நான் பதவியேற்றபோது, பெரும் நிதிப்பற்றாக்குறைக்கு மத்தியிலும் எனது அலுவலகம் முன்னெடுத்துள்ள பணிகளை பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன்.

ஐ.நாவின் முக்கிய தூண்களில் ஒன்றான மனித உரிமைக்கு தற்போது மிக குறைந்தளவு வளங்களே கிடைக்கின்றன. ஏனைய துறைகளுக்கு வழங்கப்படுவதை விட குறைவாகவே மனித உரிமைகளுக்கு வழங்கப்படுகின்றது.

இது தொடரமுடியாது. மனித உரிமைகள் மீறப்படும்போது துஷ்பிரயோகங்களும், மீறல்களும் பாரிய மோதல்களை உருவாக்கும் போது, சகலவகைகளிலும் இழப்புகள் மிகப் பெரிதாகக் காணப்படுகின்றன. இவ்வாறு தெரிவித்துள்ள அவர், மனித உரிமை மீறல்களை கண்டுபிடித்து எச்சரிப்பதற்கான தனது அமைப்பின் திறனை அதிகரிக்குமாறும், ஆபத்தான சமிக்ஞைகள் வெளியானவுடன் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரியுள்ளார்.

Related Posts