என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலைவெறிடா!

தனுசின் கொலை வெறிப்பாடல் வெளிவந்ததை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலைஞர்களும், ரசிகர்களும் பல்வேறுபட்ட பாடலின் பதிப்புக்களை வெளியிட்டவண்ணம் உள்ளனர்.யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள “என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலைவெறிடா” இவ் இசைக் காணொளியில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி நகரின் தோற்றத்தினை காண்பிக்கும் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன் யாழில் முதன் முதலாக அதி உயர் வடிவத்தில் (1080p HD) தயாரிக்கப்பட்டுள்ளது.கொலை வெறிப்பாடலின் வரிகளை முற்றிலுமாக மாற்றியமைத்து இசைக்கு மேலும் மெருகூட்டிய பாடலின் பரிணாமம் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இளம் இசையமைப்பாளர் எஸ்.ஜே.ஸ்ரலின் அவர்கள் பாடல் வரிகளை எழுதி, பாடலையும் பாடியுள்ளார். அண்மையில் இவர் இசையமைத்த ‘தண்ணீர்’ குறும்படம் 2011ற்கான சிறந்த குறும்பட இசை விருதை வென்றமை குறிப்பித்தக்கது.இந்த பாடலினை அமலன் மேகநாதன் அவர்கள் வீடியோ எடிட்டிங் செய்துள்ளார்.

Related Posts