ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியானது!

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரையில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய 23 மாவட்டங்களிலும் வழமைபோன்று இரவு 8 மணியிலிருந்து காலை 5 மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் எதிர்வரும் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 17ஆம் திகதி அமுல்படுத்தப்படும் ஊரடங்கு உத்தரவானது 18ஆம் திகதி காலை 5 மணிக்கு கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தளத்தப்படவுள்ளது.

மேலும் குறித்த 23 மாவட்டங்களிலும் 19ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரையில் தினமும் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரையில் ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related Posts