நாடுமுழுவதும் இன்று இரவு 8 மணி முதல் நடைமுறைக்கு வரும் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் மே 11ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை நடைமுறையில் இருக்கும் என்று கோவிட் -19 நோய் பரவரைக் கட்டுப்படுத்தும் தேசிய செயலணியின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களைக் கைது செய்ய இன்று இரவு முதல் சிறப்பு நடவடிக்கை நாடுமுழுவதும் ஆரம்பிக்கப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் தனிமைப்படுத்தல் சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும்.
இந்த ஆண்டு வெசாக் விழா நாளை நடைபெறும். எனினும் வெசாக் பருவத்தில் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று பாதுகாப்புப் படைகள் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றன” என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண கூறினார்.