உருளைக்கிழங்கு விவசாயிகளின் விபரங்கள் சேகரிப்பு

RegPenயாழ்.மாவட்டத்தில் உருளைக்கிழங்கு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளின் விபரங்கள் விவசாயத் திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

புன்னாலைக்கட்டுவனில் உள்ள விவசாயிகள் தாம் பயிர்ச்செய்கையின் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதனையடுத்தே உருளைக்கிழங்கு விவசாயிகளின் விபரங்கள் திரட்டப்படுகின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த மாதம் யாழிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது,விவசாயிகள தாம் உருளைக்கிழங்கு பயிர்செய்கை செய்வதாகவும் அதனை சந்தைப்படுத்தும் காலத்தில் உருளைக்கிழங்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதினால் சந்தையில் உரிய விலையைபெற முடியாத நிலமை காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்தில் செய்கைபண்ணப்படும் உருளைக்கிழங்கு சந்தைக்கு விற்பனைக்கு வரும் வேளைகளில் வெளிநாட்டில் இருந்து இறக்கமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் இறக்குமதி கட்டுப்படுத்தப்படவுள்ளதாகவும் புன்னாலைக்கட்டுவன் விவசாய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

Related Posts