உண்ணாவிரதம் இருந்த இலங்கை அகதி கைது!

arrestசெய்யாறு சிறப்பு முகாமில் இருந்த இலங்கையை சேர்ந்த செந்தூரன் என்பவர் அவரையும் அவரது குடும்பத்தினரையும் சர்வதேச ஐ.நா. அகதிகளுக்கான உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். சிறப்பு அகதிகள் முகாமில் உள்ள இலங்கை அகதிகளை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 24ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

தகவல் அறிந்த செய்யாறு ஆர்ஓடி எஸ்.சாந்தா, டிஎஸ்பி சி.ரவிச்சந்திரன் ஆகியோர் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் அவர் உண்ணாவிரதத்தை கைவிடவில்லை. நேற்று மாலை செய்யாறு விஏஓ மணிகண்டன் புகாரின் பேரில் அவரை பொலிஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Related Posts