உடுவில் நல்லாயன் தேவாலயத்தின் மீது நள்ளிரவு மர்மக் குழுவினர் தாக்குதல்

nallayan_church_002உடுவில் பகுதியில் அமைந்துள்ள நல்லாயன் தேவாலயத்தின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளதாக சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடென்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 11 ஆம் திகதி நள்ளிரவு கறுப்பு உடையணிந்த 4 பேர் கொண்ட மர்மக் குழுவினர் ஆலயத்தின் உள்ளே நுழைந்து ஆலயத்தின் கதவுகளை உடைத்து உள்ளே சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து அங்கிருந்த சில பொருட்களையும் உடைத்து இவர்கள் நாசம் செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இவர்கள் நால்வரும் சிங்கள மொழியில் உரையாடல்களையும் மேற்கொண்டுள்ளனர். காவலாளிகள் சத்தமிட்டதைத் தொடர்ந்து இவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இதேவேளை இத்தேவாலயத்தின் குருவிற்கும் தொடர்ச்சியாக இனந்தெரியாத நபர்கள் அச்சுறுத்தல்கள் விடுத்து வருகின்றனர்.

தெற்கில் கிறிஸ்த தேவாலயங்கள் தொடர்ச்சியாக தாக்கப்பட்டுவரும் நிலையில் இச்சம்பவமும் இடம்பெற்றுள்ளதால் தாக்குதல்கள் நடைபெறலாம் என்று மக்கள் அஞ்சி வருகின்றனர்.

Related Posts