ஈராக்கைப் பின்பற்றி இந்தியாவுக்கு எதிராக “ஜிஹாத்” காஷ்மீர் இளைஞர்களுக்கு அல்கொய்தா அழைப்பு!

ஈராக் மற்றும் சிரியாவைப் பின்பற்றி இந்தியாவுக்கு எதிராக புனிதப் போர் (ஜிஹாத்) நடத்த காஷ்மீர் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று அல்கொய்தா இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

alkothaa-terror-300-jpg

“காஷ்மீர் முஸ்லிம்களுக்கு” என்று தலைப்பிடப்பட்டு அல்கொய்தாவின் மூத்த தளபதிகளில் ஒருவரான மெளலானா ஆசிம் உமர் என்பவர் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில், பாகிஸ்தான், இந்தியா நிர்வாக காஷ்மீர் முஸ்லிம் இளைஞர்கள் அல்கொய்தாவில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் “ஈராக்கிலும் சிரியாவிலும் “சகோதரர்கள்” மேற்கொண்டு வரும் “பாதையை பின்பற்றி” இஸ்லாமிய தேசத்தை காஷ்மீர் முஸ்லிம்கள் இளைஞர்கள் கட்டி எழுப்ப வேண்டும். உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் ஆயுதமேந்தி புனிதப் போரை நடத்தி வருகின்றனர்.

தற்போது நாம் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவை நோக்கி முன்னேறுவோம். டெல்லி செங்கோட்டையில் இஸ்லாமிய கொடி பறக்க வேண்டும். பாகிஸ்தான் அளித்த வாக்குறுதியின்படி காஷ்மீர் விடுதலையை அங்கீகரிக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிராக காஷ்மீர் இளைஞர்கள் புனிதப் போர் நடத்த வேண்டும் என அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

Related Posts