இலங்கை இளைஞர்களில் காற்பங்கினருக்கு நீரிழிவு நோய் இருக்கின்றதாம்!

diabetes+testஇலங்கையில் 22 வயது முதல் 30 வயதுடைய இளைஞர்களில் கால் பங்கினர் (25 வீதத்தினர்) அதாவது நால்வரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனராம்! அரச மருத்துவ ஆய்வுகூட தெழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜானக நிஸாந்த இந்தத் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

2012 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலத்தில் அரச ஆஸ்பத்திரிகள், அரச மருத்துவ சிகிச்சை நிலையங்கள், மருத்துவ முகாம்கள், தனியார் மருத்துவ நிறுவனங்கள் போன்றவற்றில் பசியிருந்தோர் மேற்கொண்ட இரத்தத்தில் சர்க்கரை அளவு தொடர்பான பரிசோதனைகளின் புள்ளிவிவரத் திரட்டிலிருந்து இந்த விடயம் அம்பலமாகியயுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு சர்க்கரை நோயால் அல்லது நீரிழிவு நோயல் அதிகளவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை எதிர்காலத்தில் இருபது வயது முதல் நாற்பது வயது வரையான பிரிவினராக விரிவடையலாம் என்றும் அவர் எச்சரிக்கை செய்தார்.

இளைஞர்களில் அனேகமானோர் சந்தர்ப்பவசமாக ஏதோ ஒரு காரணத்துக்காகத் தமது இரத்தத்தை சோதனை செய்யும்போதுதான் தங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கின்றமையை அறிந்து கொள்ள நேர்கின்றது.

நீரிழிவு நோய்க்கு இலக்காகியுள்ள பெரும்பாலான இளைஞர்களுக்கு அது ஆரம்பத்தில் தெரிவதே இல்லை. இதனால் அவர்களை அறியாமலேயே அவர்கள் அந்த நோயின் பாதிப்புக்கு அதிகம் உள்ளாக நேருகின்றது. எனவே, அனைத்து இளைஞர்களுமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தங்களின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சோதனை செய்து கொள்வது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Posts