இலங்கையில் மின்னஞ்சல் மூலம் வழக்கு தொடர சந்தர்ப்பம்

email-logoஇலங்கையில் மின்னஞ்சல் மூலம் வழக்குத் தொடர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி எதிர்வரும் மார்ச் மாதமளவில் மின்னஞ்சல் மூலம் உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடர மக்களுக்கு சந்தர்ப்பம் கிட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உச்ச நீதிமன்றின் பதிவாளர் நாயகம் மஹேசி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி தூரப் பிரதேசங்களில் இருப்பவர்கள் உரிய நேரத்தில் நலன்களைப் பெற்றுக்கொள்ள இந்த வழி உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முதல் கட்டமாக அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பில் மின்னஞ்சல் ஊடாக முறைப்பாடு செய்து வழக்குத் தொடர முடியும்.

அத்துடன் 24 மணித்தியாலங்களும் மின்னஞ்சல் மூலம் வழக்குத் தொடரலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பயண செலவுகள் கிடையாது. வழக்கு தொடர்பான மூல ஆவணங்களை பின்னர் நீதிமன்றிடம் ஒப்படைக்க முடியும்.

மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளும் விசாரணை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts