இலங்கையின் மெதுவான நடைமுறைகள் குறித்து சர்வதேச மன்னிப்பு சபை அதிருப்தி

இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம், மேற்கொள்ளும் மெதுவான நடைமுறைகள் மற்றும் வெளிப்படைத் தன்மையில்லாமை என்பன குறித்து, மனித உரிமை காப்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக, சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 33வது அமர்வில் சர்வதேச மன்னிப்பு சபை எழுத்துமூல அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளது.

அந்த அறிக்கையிலேயே மேற்கூறப்பட்ட விடயங்கள் கூறப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு நிறைவுக்கு வந்த, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இடம்பெற்ற பேரின் போதும், அதற்கு பின்னரும் இடம்பெற்ற சர்வதேச சட்டத்திற்கு முரணான விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறவில்லை எனவும், தண்டனை வழங்கப்படவில்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், யோசனையின் இணைப் பங்காளர்கள் என்ற வகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை உறுதியளித்த நீதி வழங்கும் வழிமுறைகளை நிறுவும் பொறிமுறை, உண்மை, நஸ்டஈடு மற்றும் மீண்டும் எழாத வன்முறை, போன்ற பரிந்துரைகளில் பெரும்பாலானவை இன்னும் கிடப்பில் உள்ளன என்றும் மன்னிப்புசபை குறிப்பிட்டுள்ளது.

Related Posts