இலங்கையின் கொலைக்களம் சர்வதேச ‘எம்மி’ விருதுக்கு பரிந்துரை

இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் மனித உரிமைகள் மீறலை உலகுக்கு தெரியப்படுத்திய ‘மோதல் தவிர்ப்பு வலயம்: இலங்கையின் கொலைக்களம்’ (No Fire Zone: The Killing Fields of Sri Lanka) ஆவணப் படம் அமெரிக்காவின் எம்மி விருதுக்கான போட்டி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

no fire zone emmy

சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக எம்மி விருதுகளை அமெரிக்கா வழங்கி வருகின்றது. 10 பிரிவுகளில் வழங்கப்படும் இந்த விருதுப் பட்டியலில் சிறந்த ஆவணப் படங்களுக்கான பிரிவில் பிரித்தானியாவின் ‘சனல் – 4’ தொலைக்காட்சியின் ‘மோதல் தவிர்ப்பு வலயம்: இலங்கையின் கொலைக்களமும்’ போட்டியிடுகிறது.

விருதுகளுக்கு தெரிவான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் விவரங்கள் வரும் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி நியூயோர்க்கின் ஹில்டன் ஹோட்டலில் அறிவிக்கப்படும்.

Related Posts