இலங்கைக்கான இந்திய தூதுவர் யாழ். விஜயம்

India_-ashok_kanthaஇலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே.காந்தா எதிர்வரும் 23ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் வே.மகாலிங்கம் தெரிவித்தார்.

இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே.காந்தா யாழ். குடாநாட்டில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார். அச்சுவேலி தொழிற்பேட்டைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கான இந்திய தூதுவர் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அதேவேளை, வடமாகாணத்தின் உள்ள பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 1,000 மாணவர்களுக்கு பாடசாலை புத்தகப் பைகள் மற்றும் 200 ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு 20 தமிழ் புத்தகங்கள்,இராமநாதன் நுண்கலை பீட ரி.எம்.கிருஸ்ணா புரோமினேட் கார்னேரிக் மியூசியன் மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு 200 கட்டில்கள் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளதாகவும் மகாலிங்கம் கூறினார்.

Related Posts