இராணுவ பாவனையில் உள்ள வீடுகள் விரைவில் கையளிக்கப்படும்: ரெமீடியஸ்

Mureyappuயாழ். மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் இராணுவத்தினரின் பாவனையில் உள்ள வீடுகள் விரைவில் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக முன்னாள் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான முடியப்பு ரெமீடியஸ் தெரிவித்தார்.

512 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதியுடனான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது. அச்சந்திப்பின் போதே இராணுவ பாவனையில் இருக்கும் வீடுகளை கையளிப்பதற்கான உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதனடிப்படையில், அரியாலை 512 ஆவது படை பிரிவு இராணுவ முகாம் உள்ள 28 வீடுகளை எதிர்வரும் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கையளிப்பதாகவும் கொழும்புத்துறை இராணுவ முகாம் அமைந்துள்ள வீடுகளை அடுத்த மாதம் கையளிப்பதாகவும் 512வது படை பரிவின் தளபதி உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related Posts