இராணுவத்தில் இணைய தமிழர்களுக்கு தடை இல்லை: தளபதி

Jagath_Jayasuriya_CIஇராணுவத்தில் இணைந்துகொள்வதற்கு தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு தடை இல்லை. அதற்கு தகுதியுள்ளவர்களுக்கு எப்பொழுதும் வாசற்கதவு திறந்தே உள்ளது’ என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

இராணுவத்துக்கு இணையக்கூடிய தகுதிகள் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகள் தொடர்பில் கண்டறிந்து அவர்களை இணைத்துக்கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் ஆலோசனை வழங்கியுள்ளார் என்றும் இராணுவ தளபதி கூறினார்.

இராணுவ தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Related Posts