இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிப்பு

513ஆம் படைப்பிரிவின் ஏற்பாட்டில் அளவெட்டி மத்திப் பிரதேசத்தில் சுமார் மூன்று இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வீடு இன்று செவ்வாய்கிழமை கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு வீட்டின் உரிமையாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இந்த நிகழ்வின் போது தெரிவு செய்யப்பட்ட 18 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் மாற்றுதிறன் கொண்ட இருவருக்கு சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் படைப் பிரிவுகளின் தளபதி மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் பொதுமக்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts