இரண்டு கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது

arrest_1யாழ். கொட்டடி பகுதியில் இரண்டு கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி குறித்த இளைஞர் இரண்டு கிலோ கஞ்சாவினை விற்பனை செய்ய முற்பட்டபோது, யாழ். கொட்டடி பகுதியில் வைத்து நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞர் யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts