இரண்டு இலங்கைப் பெண்கள் இந்தியாவில் கைது

தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகளுடன் இந்தியாவின் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இரண்டு இலங்கை பெண்கள் நேற்று வௌ்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

832 கிராம் எடையுடைய தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகளுடன் இவர்கள் விமான நிலைய சுங்க புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தமது பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த தங்க கட்டிகள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகளின் பெறுமதி 2.6 மில்லியன் இந்திய ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இலங்கை விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL165 என்ற விமானத்தின் மூலம் இந்தியாவிற்கு சென்றுள்ளனர்.

Related Posts